மட்டக்களப்பில் நாட்டில் நிரந்தர அமைதியேற்பட தேவாலயங்களில் சிறப்பு புத்தாண்டு வழிபாடுகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தினை வலியுறுத்தியும் புத்தாண்டு தின சிறப்பு வழிபாடுகள் தேவாலயங்களில் நடைபெற்றன.

புதிய ஆண்டு பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு விசேட பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான புத்தாண்டு பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

பேராலயத்தின் பங்குத்தந்தை தேவதாசன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்துகொண்டு புதுவருட விசேட திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

இந்த வழிபாடுகளின்போது நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும்,சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் விடுதலை வேண்டியும் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படவும் விசேட பிரார்த்தனைகள் ஆயரினால் நடாத்தப்பட்டது.

இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.