ரி.எம்.வி.பி.பொதுச்செயலாளர் பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் இருவாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில்  2008ம் ஆண்டு  டிசம்பர் மாதம் 29ம் திகதி  அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன்  உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.

குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தனும் அவரது சகோதரனும்  கைது செய்யப்பட்டிருந்தனர்.
.
குறித்த இரட்டைக் கொலை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலுள்ள    தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) கட்சியின்  பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரனான பூபாலப்பிள்ளை ஹரன் ஆகியோர்  இன்று  மட்டக்களப்பு  மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 09ம் திகதி வரை  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி . எம்.கணேசராசாவினால்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.