மேட்டுநில சோளன் பயிர்செய்கையின் சோளன் அறுவைடை விழா சில்லிக்கொடியாறு பிரதேசத்தில் இடம்பெற்றது

(லியோன்)


2015ஆம் ஆண்டு  ஜனாதிபதி செயலணி  குழு மூலமாக  உணவு உற்பத்தியின்   தேசிய திட்டம்   2016 தொடக்கம் 2018  ஆண்டு வரை  அமுல் படுத்த திட்டமிடப்பட்டதற்கு  அமைவாக   கிழக்குமாகாணதிற்கான  நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கப்பட்ட  நிதியினூடாக மாணியத்திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்ட  விவசாயிகளுக்கு கலப்பின சோளன் வழங்கப்பட்டு பயிர்ச்செய்கைபட்டு வருகின்றது .



இவ்வாறு  பயிர்ச் செய்கை செய்யப்பட  மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச  பிரிவிற்குட்பட்ட  மண்டபத்தடி  விவசாய விரிவாக்கல் நிலையத்தின்  காஞ்சிரன்குடா விவசாயப் போதனாசிரியர்  பிரிவின் கீழ் தேசிய  உணவு உற்பத்தி திட்டத்திற்கு அமைய விவசாயம் செய்யப்பட சோளன்  பயிர்செய்கையின்   காஞ்சிரன்குடா   விவசாய போதனாசிரியர்  செல்வி . கே . நிஷந்திகாவின் ஒழுங்கமைப்பில்   மட்டக்களப்பு   விவசாய திணைக்கள  உதவி  விவசாய பணிப்பாளர்  வி .பேரின்பராஜா  தலைமையில்  சில்லிக்கொடியாறு  பிரதேசத்தில்   மாணிக்கப்போடி  நித்தியானந்தத்தின்  மேட்டுநில சோளன்  பயிர்செய்கையின்   சோளன் அறுவைடை விழா இன்று இடம்பெற்றது .


இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  உதவி பணிப்பாளர் தெரிவிக்கையில்  இலங்கையில்  மொத்த சோளன்  தேவை  400,000 மெற்றிக் தொன்களாக  இருந்த போதிலும்  2014 மற்றும் 2015 ஆண்டுகளில்  சோளன்   மொத்த உற்பத்தி  235,000 மெற்றிக் தொன்களாக  காணப்பட்டது.

  எனவே  நாட்டின்   சோளன்    மூன்று வருடங்களில் மொத்த உற்பத்தியாக   1.6 5000 மெற்றிக் தொன்  உற்பத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது . இதனை இலக்காக கொண்டு உலர்வலயமான  எமது  மாவட்டத்தை போன்று  ஏனைய  மாவட்டங்களிலும்  உற்பத்தி  செயற்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது . இந்த வகையில்  கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் மூலம்  கிடைக்கப்பட்ட  நிதியினூடாக  50 % வீதம்  மாணியத்திட்டத்தின் கீழ்  விவசாயிகளுக்கு  கலப்பின சோளன்  வழங்கப்பட்டு  இச்செயல்திட்டத்திற்கு எங்களான பங்களிப்பை  செய்துவருகின்றோம் .


மட்டக்களப்பு  விவசாயத்தினைக்களம் இதுபோன்று  ஏனைய  மறுவயல் பயிர்களான , நிடக்கடலை ,பயறு , உளுந்து , கௌப்பி போன்ற  பயிர்செய்கைகளையும்  ஊக்குவிக்கப்படுகின்றது .


இவேலைத்திட்டமானது  மாவட்ட மட்டத்தில்  பிரதி விவசாயப்பனிப்பாளர் , உதவி விவசாயப் பணிப்பாளரினுடாக  கண்காணிக்கப்பட்டு வியசாயப் போதனாசிரியர்  பிரிவுகளில்  போதனாசிரியர்களின்  உதவியுடன்  விவசாயிகளின் உற்பத்தி  செயற்பாடுகள்  நடைப்பெறு வருவதாக தெரிவித்தார் .


இந்நிகழ்வு   விவசாய திணைக்கள பாடவிதான உத்தியோகத்தர்களான   எஸ் . சித்திரவேல் , கணேசமூர்த்தி , விவசாய போதனாசிரியர்கள்  மற்றும்  சில்லிக்கொடியாறு  பிரதேச விவசாயிகள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .