புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனம் நடைமுறைப்படுத்திவரும் “ வலுவற்ற மக்களின் மனித மாண்பை மேம்படச்செய்து வறுமையற்ற நிலையை உருவாக்குதல்” செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு தலைமை வைத்திய அதிகாரி டாக்டர் டபிள்யு டி ஐ.சாம குணதிலகவினால்  மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை புற்று சோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

புற்றுநோய் என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகின்றது,  மட்டக்களப்பு மாவட்டத்தில் அதன் தாக்கம், இந்நோயைக் குறைக்கும் தடுக்கும் வழிவகைகள் என்பன குறித்து மிக விளக்கமாக தெளிவுபடுத்தப்பட்டது.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்திக் இயக்குனர் அருட்பணி. ஜிரோன் டீ லிமா அவர்களின் தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துச்செல்லும் புற்நோய் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை விழிப்படைய செய்யும் வகையில் தொடர்ச்சியாக இந்த கருத்தரங்கினை நடாத்தவுள்ளது.