மட்டக்களப்பு சிவில்சமூக அமைப்பு சிவில் அமைப்பா அல்லது அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அமைப்பா? – அரியம் கேள்வி

மட்டக்களப்பு சிவில்சமூக அமைப்பு உண்மையில் சிவில் அமைப்பா அல்லது அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அமைப்பா?என்ற சங்கடம் மக்களுக்கு உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டசிவில் சமூக அமைப்பு ஊடக சந்திப்பு தொடர்பாக கேட்டபோது மேலும் கருத்து கூறிய அரியநேத்திரன் அவர்,

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் தொடர்ந்தும் தாம் தலைவர் என அண்மையில் ஊடக சந்திப்பை தலைமையேற்று நடாத்தியிருந்தார் மேலும் ஒருவர் கடந்த பொதுத்தேர்தலில் ஆனந்தசங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது யாழ் நூலகத்தில்கடந்த 19ஃ12ஃ2015ல் புதியஅரசியல் அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ளார்.

எனவே யாரும் எப்படியும் எந்த தேர்தலிலும் தாம் விரும்பிய அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் தேர்தல் முடிந்தபின் மீண்டும் சிவில்சமூக அமைப்பு என்று கூறுவதும் எந்தவித்தில் பொருந்தும் அப்படியானால் ஒரு நடுநிலையான அமைப்பாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பை கருதமுடியுமா? சிவில் சமூகம் என்பது மததலைவர்கள் மற்றும் எந்தஅரசியல்கட்சிகளையும் பிரதிநித்துவப்படுத்தாதவர்களாக இருக்கவேண்டும் என்பதே சரியாகும்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தில் உள்ள அனேகமானவர்கள் அரசியல் கட்சி சாராதவர்களாக இருந்தும் ஓரிருவர் ஐக்கியதேசிய கட்சிக்காறர்களும் தமிழர்விடுதலைக்கூட்டணி கட்சிக்காறர்களும் அங்கத்தவர்களாக இருக்கும் போது அது நேர்மைத்தன்மை பேணப்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு இயல்பாகவே எழும்.

தாம் ஒரு அரசியல் கட்சியில் பகிரங்கமாக அதுவும் எமது தமிழ்தேசியகூட்டமைப்புக்கு எதிராக தமிழ்மக்களின் வாக்கை சிதறடித்து வேறு இனத்தவரை பாராளுமன்றம் அனுப்ப பேரினவாத கட்சியிலும் ஏனைய கட்சிகளிலும் போட்டியிட்டு தேர்தல் முடியும்வரை சிவில் சமூகத்தில் இருந்து விலகியிருந்தோம் தேர்தலில் வெற்றியீட்டாதபோது மீண்டும் சிவில் சமூகத்தில் சேர்ந்துள்ளோம் என்று கூறுவது எந்த வகையில் பொருந்தும் இன்னுமொரு தேர்தல் வந்தால் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் இதைத்தானே செய்வார்கள் என்ற சந்தேகம் மக்களுக்குண்டு.

எனவே இந்த விடயங்கள் நேர்மையாக செயலாற்றும் சிவில்சமூக அங்கத்தவர்களுக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.