வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள் ஆலயத்தின் யேசுவின் வரலாறை வெளிப்படுத்தும் கண்காட்சி திறந்துவைப்பு

நாங்கள் புதிதாக சிந்திக்கப்பழகவேண்டும் என மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள் ஆலயத்தின் யேசுவின் வரலாற்றினை குறிக்கும் கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள் ஆலயத்தின் பங்குத்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சி திறப்பு விழாவில் மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

யேசுவின் பிறப்பு முதல் அவரின் இறக்கும் வரையிலான காலங்களில் நடைபெற்ற சம்பங்களைக்கொண்ட ஆறு கண்காட்சி கூடங்கள் இங்கு திறந்துவைக்கப்பட்டன.

ஆலயத்தின் பங்குத்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளாரின் எண்ணக்கருவில் உருவாகி வீச்சுக்கல்முனை பங்கு மக்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களின் பங்களிப்புடன் இந்த கண்காட்சி கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை யேசு கிறிஸ்துவின் கிறிஸ்மஸ் சிறப்பாக அனுஸ்டிப்படவுள்ள நிலையில் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.