வீதி விபத்துகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதியுதவி வழங்கிவைப்பு

சிறுவர் காயமடைதல் தவிர்ப்பு திட்டத்தின் கீழ் இவ்வாண்டு இடம்பெற்ற வீதி விபத்துக்கள் உட்பட பல்வேறு விபத்துக்களில் சிக்கி பாரதூரமாகக் காயம்பட்ட 15 சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டதாக சர்வோதய இயக்கத்தின் கல்முனைப் பிரிவு இணைப்பாளர் எம்.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

அம்பாறை கச்சேரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை அரசாங்க அதிபர் துசித்த வனசிங்ஹ இந்த உதவு தொகையை பாரதூரமாகக் காயம்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 15 சிறார்களின் குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஐரோப்பிய யூனியனி;ன் அனுசரணையோடு மேற்கொள்ளப்படும் “சிறுவர் விபத்து தவிர்ப்பு ஊhடைன ஐதெரசல Pசநஎநவெழைn) திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ. அமீர், சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், சர்வோதய இயக்கத்தின் கல்முனைப் பிரிவு இணைப்பாளர் எம்.எல்.எம். பாரிஸ், மாவட்டச் செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பதிகாரி ஐ.எல்.எம். இர்பான், பிரதேச செயலகங்களின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், பயனாளிக் குடும்பங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை, இறக்காமம், உஹனை, மஹாஓயா, பதியதலாவ மற்றும் நாவிதன்வெளி ஆகிய 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறுவர்கள் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதையும், அங்கவீனமடைவதையும் தவிர்ப்பதற்காக “வருமுன் காப்போம்” என்ற இந்த விழிப்புணர்வுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.