வலயக்கல்வி அலுவலகத்தின் சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு வலயக்கல்வி  அலுவலகம் நடாத்தும்  சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு வலயக்கல்வி  அலுவலகம் நடாத்தும்  சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வுஉட்படுத்தலின் ஊடாக மக்களின் அனைத்து ஆற்றல்களுக்கும் இடமளித்து வலுவூட்டுவோம் எனும் தொனிப்பொருளில்   மட்டக்களப்பு வலயக்கல்விப்  பணிப்பாளர்  கே .பாஸ்கரன் தலைமையில்  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு  விவேகானந்தா பெண்கள் கல்லூரி கல்விக்கான ஆலோசகர்  என் . இதயராஜன்கௌரவ விருந்தினராக  மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்  எஸ் . கிரிதரன் , சிறப்பு விருந்தினராக   மட்டக்களப்பு   சமூக சேவைகள் திணைக்கள  மாவட்ட  சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி  மற்றும் விசேட கல்வி இணைப்பாளர் எம் . தயானந்தன் , வலயக்கல்வி  உதவி கல்விப் பணிப்பார்கள் ,பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் , அலுவலக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வின் போது பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாற்றுத்திரனாளிகளையும் , மட்டக்களப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றும் மற்றுத்திரனாளி பட்டதாரி ஆசிரியர்களையும் மற்றும் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி அரச தொழில் புரிவோரையும்  கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
.


இந்நிகழ்வில்  தரிசனம், வாழ்வோசை,ஓசாணம், மென்கப், புகலிடம் ஆகிய நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டதுடன் , மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது .