News Update :
Home » » தூக்கில் தொங்கிய நிலை பத்து வயது சிறுவனின் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலை பத்து வயது சிறுவனின் சடலம் மீட்பு

Penulis : Anthony Leon raj on Sunday, December 20, 2015 | 7:42 AM

(லியோன்)

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மயிலம்பாவெளி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலை  பத்து வயது சிறுவனின்  சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்  பொலிசார் தெரிவிக்கின்றனர் .


மட்டக்களப்பு மயிலம்பாவெளி  காமாச்சி அம்மன் கோவில் வீதி பகுதியை  சேர்ந்த    மயிலம்பாவெளி ஸ்ரீ  விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  தரம் ஐந்தில் கல்வி  கற்ற   மாணவனே  தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக நேற்று மாலை  ஏறாவூர் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலம்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  வைக்கப்பட்டு  சிறுவனின் மரணம்  தொடர்பான விசாரணையின் பின்  சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாக   பொலிசார் தெரிவிக்கின்றனர் .






Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger