(லியோன்)
மாவட்ட இந்து
இளைஞர் பேரவை மணிகண்ட மகர
ஜோதி
தீர்த்த யாத்திரை குழுவின் ஐயப்பன் மண்டல
விசேட
யாக பூசை மட்டக்களப்பில் இடம்பெற்றது .
மணிகண்ட மகர ஜோதி
தீர்த்த
யாத்திர குழுவின் ஐயப்பன் மண்டல பூசைகள் சிவஸ்ரீ சிவயோக செல்வ சாம்பஸ்ரீ சாம்பசிவம் குருக்கள் தலைமையில் மட்டக்களப்பு மாமாங்கம் திருத்தொண்டர் மண்டபத்தில் இடம்பெற்றது .
இடம்பெற்ற மணிகண்ட மகர ஜோதி
தீர்த்த
யாத்திர குழுவின் ஐயப்பன் மண்டல யாக பூசையில் மட்டக்களப்பு கோயில்குளம் பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள்
சிவஸ்ரீ
செ .கு . உதயகுமார் குருக்களினால் விசேட யாக பூசைகள் நடத்தப்பட்டு பிரதான கும்பம் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை
தொடர்ந்து ஐயப்பன் பஜனாம்ர்தமும் அதனை தொடர்ந்து விநாயகர் விசேட தீபாராதனை பூசைகளும்
இடம்பெற்றது .
இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட
இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகர
ஜோதி ஐயப்பன் மண்டல பூசை நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர் .