தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் கோம்பை அன்வரின் “யாதும்" விபரண குறும்படம் மட்டக்களப்பில்

மகுடம் கலை இலக்கிய வட்டமும் மட்டக்களப்புஅரங்க ஆய்வு கூடமும் இணைந்து நடாத்தும் தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் கோம்பை அன்வரின்" யாதும்" விபரண குறும்பட திரையிடலும், கலந்துரையாடலும் அண்மையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் பேராசிரியர் சி.மௌனகுருவின் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் நாட்டில் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களின் வரலாற்றின் பார்வையாக இந்த குறும்படம் தாயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் விரிவுரையாளர்கள்,எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் முஸ்லிம் உறவினை மனக்கண் முன்பாக கொண்டுவரும் ஒரு வெளியீடாக ;" யாதும்" விபரண குறும்படம் வெளியிட்டுவைக்கப்பட்டது.

முஸ்லிம் மக்களின் கலை,கலாசாரம்,பண்பாட்டு விழுமியங்கள் அவர்கள் தமிழர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய விதம் தொடர்பில் சிறப்பான முறையில் இந்த குறும்படம் வெளியிட்டுவைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் இலங்கையில் தமிழ் பேசும் மக்களான தமிழர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் உள்ள கசப்புணர்வுகளை இல்லாமல்செய்ய இவ்வாறான வெளியீடுகள் வெளிக்கொணரப்படவேண்டும் என சமூக ஆர்வலர்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.