( லியோ )
கிழக்கு மாகாணத்தினல் முதன் முதலாக புற்று நோய் பிரிவுக்கான சகல நவீன வசதிகளை
கொண்ட வைத்தியசாலை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது .
250 மில்லியன் ரூபா செலவில்
அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகள்
கொண்ட
புதிய கட்டடத்தொகுதியை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது .
இந்நிகழ்வுக்காக எதிர் வரும் 13ஆம்
திகதி
வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார் .
இதன் ஆரம்ப கட்ட
வேலைகள் பூர்த்தியடைந்ததை நிலையில் ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு புதிய கட்டிட தொகுதியை பார்வையிடுவதற்காக சுகாதார அமைச்சின் சேவைகள் வழங்கல் பிரிவுக்கான பிரதி பணிப்பாளர் குணரத்தன இன்று மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டார் .
மட்டக்களப்பு புற்று நோய் வைத்தியசாலையின் கட்டிட
தொகுதியை பார்வையிட வந்த
அமைச்சின் சேவைகள்
வழங்கல்
பிரிவுக்கான பிரதி பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இப்ரால் லெப்பையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிட தொகுதிகளையும் பார்வையிட்டனர் .