ஆரையம்பதி பரமநயினார் ஆலயத்தின் இராஜகோபுர மகா கும்பாபிசேகம்

இலங்கையின் மிகவும் பழமையான ஆலயங்களுல் ஒன்றாகவும் முதல் ஐய்யனார் ஆலயமாகவும் உள்ள மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீபரமநயினார் (ஐயனார்)ஆலயத்தின் இராஜகோபுரத்தின் மகா கும்பாபிசேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 31ஆம் திகதி ஆலயத்தில் கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் நடைபெற்றுவந்ததுடன் இன்று காலை கும்பாபிசேக கிரியைகள் நடைபெற்றன.

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ஸ்ரீரங்கநாதன் குருக்களினால் நடாத்தப்பட்டது.

இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாகபூஜை கும்ப பூஜை நடைபெற்று மாணவர்களின் விசேட நடன நிகழ்வுகளும் சங்கீத நிகழ்வுகளும் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து பிரதான கும்பத்துக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கும்ப ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு இராஜகோபுரத்துக்கு வேத,நாத கோசங்களுடன் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிசேக நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.