இளைஞர் பாராளுமன்ற தேர்தல் மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது

இளைஞர் நாடாளுமள்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நாடளாவியரீயில் நடைபெற்றது.


இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதியிலுமிருந்து தலா ஒவ்வெரு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இன்று சனிக்கிழமை (07) காலை 8 மணிமுதல் வாக்களிப்புக்கள் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றன.

பிரதேச செயலாளர்கள், மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்களினால் நடாத்தப்படும் இத்தேர்தலில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரீவுகளில் வாக்களிப்பு சிறப்பாக நடைபெற்றன.

பெருமளவான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதாக எமத பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வேண்டி 32 பேர் போட்டியிட்டனர் மாவட்ட ரீதியில் 348 இளைஞர் கழகங்களைச் சேர்ந்த 18661 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்

வாக்களிப்பு நிலையங்களாக காணப்பட்ட  பிரதேச செயலகங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு பிரதேச ரீதியான முடிவுகள் மாவட்ட தேர்தல் நிலையமாகக் காணப்படும்  கச்சேரிக்கு  அறிவிக்கப்படும்.

பின்னர் தொகுதியில் வெற்றிபெற்று தெரிவு செய்யப்ட்டுள்ள வெற்றியாளர்களின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக  இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம். நைறுஸ் தெரிவித்தார்.