பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்ககோரி மட்டக்களப்பில் விசேட நிகழ்வு

சர்தேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாட்கள் செயற்பாட்டு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதன் ஆரம்ப நிகழ்வாக பால்நிலை வன்முறைக்கு எதிராக செயற்படுவோம் என்னும் வாசகம் பொறிக்கப்பட்ட கைப்பட்டி அணியும் திட்டம் ஒன்றை நடாத்தியது.

இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் இது தொடர்பான நிகழ்வு காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி அஜித்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பெருமளவான பெண்கள் கலந்துகொண்டு கைப்பட்டி அணியும் திட்டத்தில் இணைந்துகொண்டனர்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையினை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நியைலத்தின் தலைவி தெரிவித்தார்.

இந்த நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகம் ஊடாகவும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.