கருணாம்மான் அடிக்கல் நட்ட கட்டிடத்தை திறந்துவைத்த விவசாய அமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழுர்,கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக்கட்டிடம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ரி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் கலந்துகொண்டார்.

மிகவும் பின்தங்கிய பகுதியான மகிழுர்,கண்ணகிபுரம் பகுதி மாணவர்களின் நலன்கருதி இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட அதிதிகள் பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டிடம் 2014ஆம் ஆண்டு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் அடிக்கல் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.