அடுத்த சில நாட்டிகளில் இலங்கையில் மீண்டும் மழைபெய்வதற்கான சாத்தியம் -வானிலை அவதான நிலையம்

அடுத்து சில நாட்களில் இலங்கையில் மீண்டும் மழை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்தாவது,

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இடையிடையே மழை காணப்படும். பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் நாட்டின் சில இடங்களில் இடிய மழை காணப் படும்.

இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று பலமானதாக வீசும். பொதுமக்கள் இந்த இடிமின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
காங்கேசன்துறை முதல் திருகோணமலை, பொத்துவில் ஊடான அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

ஏனைய கடல் பிராந்தியங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பாணப்படும்.

கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20 கிலோ மீற்றர் முதல் 30 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசும். இந்தக் காற்றின் வேகமானது சில சந்hர்ப்பங்களில் காலி முதல் அம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வீசுவதன் காரணத்தினால் இக்கடல் பிராந்தியங்கள் இடையிடையே கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(2015.11.12ம் திகதி மதியம் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு)