மயிலம்பாவெளியில் பாடசாலை அப்பியாச கொப்பிகள் தயாரிக்கும் நிலையம்

( லியோ ) 


மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலத்தினால்   சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு  பிரதேச செயலக பிரிவுகளில் பல வேலைத்திட்டங்களை      செயல்படுத்தப்பட்டு  வருகின்றது.

இந்த திட்டத்தின்  கீழ்    மயிலம்பாவெளி கிராமசேவை பிரிவில்  பாடசாலை அப்பியாச கொப்பிகள் தயாரிக்கும் தொழிலில்   ஈடுபட்டுள்ள இளையதம்பி குனதீபன்  இல்லத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள    இயந்திரத்தினை  ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  இன்று இடம்பெற்றது .

இது வரை காலம்  அப்பியாச கொப்பிகள் தயாரிப்பில்  ஈடுபட்டுள்ள   இவர் தனது பொருளாதாரத்தின் அடிப்படையாக கொண்டு    சிறிய அளவிலான தொழில் முயற்சியில்  ஈடுபட்டு வந்துள்ளார்  .

இந்த நிலையில்  இவரது தொழிலை  அபிவிருத்தி செய்யும்  நோக்கோடு  செங்கலடி பிரதேச செயலாளரின்  சிபார்சுக்கு அமைவா  சுவிஸ் நாட்டு நன்கொடையயாளரின் உதவியுடன் அப்பியாச கொப்பிகள்  தயாரிக்க தாழ் வெட்டும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலாளர் .உதயஸ்ரீதர், மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர்  கே .சிறிதரன் , சமுர்த்தி வாழ்வின் எழுச்சி திட்ட முகாமைத்துவ பணிப்பாளர் கே .கணேசமூர்த்தி , இயந்திரத்தினை வழங்கிய நன்கொடையாளர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர் .