தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு எழுத்தாளர்களின் நூல் கண்காட்சி

(லியோ )  

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு  "வாசிப்பை  நேசிப்போம் புத்தகங்களை  நண்பர்களாக்குவோம் எனு தொனிப்பொருளில்  "மட்டக்களப்பு மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதத்தின் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்களின் நூல் கண்காட்சியினை  இன்று மட்டக்களப்பு  பொதுநூலக கேட்போர் கூடத்தில்  மாநகர பிரதி ஆணையாளர் .என் .தனஞ்செயன்  ஏற்பாட்டில்  மாநகர  ஆணையாளர் எம் .உதயகுமார்  தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி .தவராஜா கலந்துகொண்டார் .
நிகழ்வில்  நூலக பொறுப்பாளர் பி .சரவணபவன் எழுத்தாளர்கள் மாநகர சபை  உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிகையில்

இந்த கண்காட்சி ஊடாக மட்டக்களப்பு எழுத்தாளர்களின் படைப்புகள் மக்களுக்கு தெரியபடுத்தவும் , மாணவர்கள் மக்கள் மத்தியில் வாசிப்பின் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்குடனும்  மற்றும்  எழுத்தாளர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் நோக்குடனும்   இந்த நூல் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை  மிக சிறந்த  விடயமாகும் .

அண்மை காலமாக மாநகர சபை சமுதாய அபிவிருத்தி தொடர்பான சகல நடவடிக்கைகளிலும்  ஈடுபடுகின்ற மாநகர  சபையாக ஆணையாளரினால் மற்றியமைக்கப்படுகின்றது .

அந்த வகையில் இந்த நூல் கண்காட்சியும் சிறப்பு பெறுவதாக கருதப்படுகின்றதுமட்டக்களப்பை பொறுத்த மட்டில்  வாசிப்பு என்பது மிகவும் குறைவாக இருந்துவருகின்றது .

இலக்கிய நிகழ்வுகளிலே பொதுமக்கள் கலந்து கொள்வதும் மிகவும் குறைவாக இருக்கிறது .

இதன்  காரணங்களை இனம் கண்டு அறிய வேண்டிய தேவை  எமக்கு இருக்கின்றது . குறிப்பாக மாணவர்கள் மத்தியிலே  வாசிப்பு என்பது மிக மிக குறைவு . பாடசாலை மாணவர்களுக்கு பெரும்பாலும்   எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள்   தெரியாத நிலையில் உள்ளனர் ,  

இந்த நிலையில்  மாறவேண்டும் ,வாசிப்பு என்பது மாணவர்கள் மத்தியில் மந்தமாக உள்ளது , வாசிப்பில் நாட்டம் கூடிய மாணவர்கள் கல்வியில் அதிக அறிவை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கின்றது  , வாசிப்பு என்பது மனிதனை பூரனமாக்கும் என்று ஆன்மீகவாதி விவேகானந்தர்  கூறியிருகின்றார் .

எனவே மாணவர்கள் மத்தியிலும் ,மக்கள் மத்தியிலும்  வாசிப்பு பற்றிய பூரண  அறிவை கொடுத்து  எமது  எழுத்தாளர்களின் எழுத்தாற்றலையும் , மாணவர்கள் மத்தியல் வாசிப்பையும் ஊக்குவிக்க செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்