கல்லடி பகுதியில் உணவு விடுதிகள் ஐந்துக்கு 60ஆயிரம் தண்டம்

மட்டக்களப்பு பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் மருத்துவச்சான்றிதழ் இன்றியும் அனுமதிப்பத்திரம் இன்றியும் இயங்கிய ஐந்து உணவக நிலையங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழங்கில் 60ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை காலை முதல் கல்லடி பொதுச்சுகாதார பரிசோதகர் க.ஜெயசங்கர் மற்றும் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் ஆகியோர் இணைந்து கல்லடி பகுதியில் உள்ள உணவுச்சாலைகள் மற்றும் வெதுப்பகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு எதிராக 15 வழக்குகள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்ததாக பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

இதன்போது 10 வழங்குகளுக்கு தலா 6000ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் ஐந்து வழக்குகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதிக்கு பிறப்போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் சுத்தமான,சுகாதாரமான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் இவ்வாறான  சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.