நீரிழிவு நோயினால் வருடாந்தம் 5.1மில்லியன் பேர் உயிரிழப்பு - வைத்திய கலாநிதி தர்சினி கருப்பையாப்பிள்ளை

உலகில் நீரிழிவு நோய் காரணமாக வருடாந்த 5.1மில்லியன் பேர் உயிரிழப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பு நோய் நிபுணர் வைத்திய கலாநிதி தர்சினி கருப்பையாப்பிள்ளை தெரிவித்தார்.


ஆறு நிமிடத்துக்கு ஒருவர் நீரிழிவு நோயினால் உயிரிழப்பதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.

சர்வதேச நீரிழிவு நோய் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பு நோய் நிபுணர் வைத்திய கலாநிதி தர்சினி கருப்பையாப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் திருமதி கிரேஸ் நவரட்னராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையின் பணிப்பாளர்கள்,வைத்திய நிபுணர்கள்,தாதியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நீரிழிவு நோய் தொடர்பான பல்வேறு கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.