மைலம்பாவெளியில் வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மைலம்பாவெளி தாழையடிக் கிராமத்தில் 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை பகல் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது.


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இவ்வீடுகளை நிருமாணிப்பதற்காக கடன் நிதி உதவி வழங்கப்படுகின்றது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான குடியிருப்பாளர்களுகள் ஒவ்வொருவருக்கும் அரச காணி 15 பேர்ச்சஸ் வீடுகளை நிருமாணித்துக் கொள்வதற்காக வழங்கப்பட்டள்ளது.

நிகழ்வில் பயனாளி;க் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் வன்னியாராச்சி, மாவட்ட முகாமையாளர் கே. ஜெகநாதன், காணி மீட்பு ஆணைக்குழுவின் மாவட்டப் பணிப்பாளர் என். விமல்ராஜ், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். சித்திரவேல் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.