மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையின் ஏற்பாட்டில் நவராத்திரி நிகழ்வு

நவராத்திரி தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.


கல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தினம் ஒன்பது நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு,மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபையின் ஏற்பாட்டில் நவராத்திரி நிகழ்வு இன்று மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழருவி சிவகுமார் சிறப்பு சொற்பொழிவாளராக கலந்துகொண்டதுடன் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ் மற்றும் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது முப்பெரும் தேவியர்களுக்கு கீரிமடு சித்திவிநாயர் ஆலயத்தின் பிரதமகுரு ஜெகநாதன் குருக்களினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் தமிழருவி சிவகுமார் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.