விமர்சனங்களையும் குற்றசாட்டுக்களையும் முன் வைத்தவர்களிடமே பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன .

( லியோன் )   சுகாதார முன்னனி எனும் வேலைத்திட்டத்தின் கீழ்   கிழக்கு மாகாணத்தில்  தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான   மலசல கூடங்கள்  அமைப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 இதன் கீழ்  இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்  .எம் .டி . . நிசாம்  தலைமையில் இன்று  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது

  இதன் போது கட்டிட நிர்மான பணிக்களுக்காக ஒரு பாடசாலைக்கு தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டது

இந்நிகழ்வின் போது  உரை ஆற்றிய  பணிப்பாளர்  தெரிவிக்கையில்   தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள    ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி  திட்டத்தின் உள்ளடக்கப்பட்ட பாடசாலைகளில் உள்ளடங்கப்படாத  தேசிய பாடசாலைகள் என்ற வகையில் கிழக்கிலங்கையில் 122 பாடசாலைகளில் இந்த செயல் திட்ட  நடைமுறை படுத்த படுவதாக தெரிவித்துக்கொண்டார் .

இந்த 122 பாடசாலைகளில் 20 பாடசாலைக்கான   காசோலைகள் ஏற்கனவே  வழங்கப்பட்டுள்ளதாகவும்   இதில் 102 பாடசாலைகளுக்கான  காசோலைகள்  மாகாண கல்வி பணியகத்துக்கு வழங்கப்பட்டதாக  தெரிவித்தார் .

  இதில் சிங்கள மொழிக்கான  காசோலைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும்  தற்போது தமிழ் மொழிக்கான காசோலைகள்  இன்று வழங்குவதாக தெரிவித்துக்கொண்டார் .

மேலும் அவர்  நிகழ்வின் போது கூறுகையில்  பாடசாலைகளில் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடங்கள்  தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களினாலும்  பெற்றோர்களை சார்ந்த பாடசாலை சங்கங்கள்  விமர்சனங்களையும் குற்றசாட்டுக்களையும் முன் வைப்பதாகவும் , இவ்வாறான கேள்விகளை எழுப்பியவர்களிடமே  தற்போது  அந்த பொறுப்புக்களை ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவித்துகொண்டார் .  

 இதுவரை காலம் எதனை தரமாக செய்ய வில்லை என விமர்சித்தவர்களிடமே  அதனை தரமாக செய்து காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அரசு வழங்கி உள்ளதாகவும் , இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விடகூடாது  எனவும் இந்நிகழ்வின் போது கேட்டுக்கொண்டார் .

 நிகழ்வில்  கிழக்கு மாகாண கல்வி திணைக்கள  பிரதி திட்டமிடல் பணிப்பாளர் .எஸ் .டி .பீரிஸ் , கிழக்கு மாகாண பிரதி கல்வி பணிப்பாளர்         ( கணிதம் ) எஸ் . ஜோன்சன் ,   மட்டக்களப்பு கல்வி வலய திட்டமிடல் பணிப்பாளர்  எஸ் . சசிந்திர சிவகுமார்  மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்கள் , பொருளாளர்கள்  ஆகியோர்  கலந்துகொண்டனர் .

 இந்நிகழ்வின் போது பாடசாலை கட்டிட நிர்மான பணிகளுக்காக பொறுப்பு கூறலுக்கான  கையெப்பம் பாடசாலை அதிபர் ,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ,மற்றும் பொருளாளர் ஆகியோர் கையெப்பம்  வைத்த பின்னரே காசோலைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .