சீரற்ற காலநிலையிலும் திட்டமிட்டப்படி நிகழ்வுகள் இடம்பெற்றது .

. ( லியோன்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இன்றைய விஜயம்     சீரற்ற காலநிலையால்   இரத்து செய்யப்பட்டதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரை, மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயம், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மட்டக்களப்பு புனித மரியாள் தேவலாயம் ஆகியவற்றுக்குச் சென்று பிரார்த்தனை மற்றும் சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்   இன்றைய தினம் மட்டக்களப்புக்கு வருகை தரவிருந்த நிலையில் அவரது விஜயம் ரத்தானதை தொடர்ந்து  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய  நிகழ்வுகள் மற்றும் சமய தலைவர்களின் சந்திப்பும் திட்டமிட்டபடி நடைபெற்றது
           
இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய வழிபாடுகள் மற்றும் சமய தலைவர்களின் சந்திப்புக்களில்     இன்று மட்டக்களப்புக்கு விஜயத்தை  மேற்கொண்ட  வடமத்திய மாகாண முதலமைச்சர்  பியசல  ஜயரத்ன , கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ , கிழக்கு மாகாண முதலமைச்சர்   நசீர் அகமட் , மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் ,பாராளுமன்ற உறுப்பினர்களான  , அலிசாகிர் மௌலானாஅமீர் அலி , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் .பி. எஸ் .எம் .சார்ள்ஸ் மற்றும் அரச உயர் அதிகாரிகள்  ஆகியோர்  கலந்துகொண்டனர் .