தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் கைது(VIDEO)

குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கிறிஸ்மஸ் வழிபாட்டின்போது தேவாலயத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே அவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.