சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு அழைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து நாம் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோதும், தமக்கு மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையென குறிப்பிட்டனர்.