இந்நிகழ்வு கிழக்கு மாகாண லியோ கழக பொறுப்பாளர் லயன் டி . ஜசிகாவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது .
இதன் ஆரம்ப நிகழ்வாக
சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றது . இதனை தொடர்ந்து
சமூக சேவை நோக்கோடு லியோ கழக உறுப்பினர்கள் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவில்
சிகிட்சை பெற்று வரும் நோயாளிகளின் நலன் விசாரித்ததுடன் அவர்களுக்கான உணவு
உண்பதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு
சத்துருக்கொண்டான ஒசானம் நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர் . அங்குள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அவசிய
உணவு பொருட்கள் வழங்கியதோடு அவர்களுடன் இணைந்து சமாதான
தினத்தை நினைவு கூறும் முகமாக அங்கு
சமாதான புறா பறக்கவிடப்பட்டது இதனை
தொடர்ந்து லியோ கழகத்தினர் ஒசானம் நிலைய
பிள்ளைகளுடன் இணைந்து மதிய உணவினை உட்கொண்டனர் .
இந்நிகழ்வில் மாவட்ட இரண்டாவது ஆளுனர் அசேல கருணா வர்த்தன
கழக மாவட்ட பொருளாளர் புத்திக்க வீரசேகர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட லியோ கழக
அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.