“ முத்தான வியர்வை “ எனும் தொனிப்பொருளில் சுயதொழில் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்.

(லியோன்)   மட்டக்களப்பு மாவட்ட செயலக  வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால்   முத்தான வியர்வை எனும் தொனிப்பொருளில் மாபெரும் கண்காட்சியும் விற்பனையும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .
  மட்டக்களப்பு  மாவட்ட  திவிநெகும   திணைக்கள பணிப்பாளர்  .பி .குணரட்ணம்  தலைமையில்  மட்டக்களப்பு  நாவக்குடா  விளையாட்டு மைதானத்தில்  இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் .சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு   ஆரம்பித்து வைத்தார்  .

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  வாழ்வின் எழுச்சி  சமுதாய அடிப்படை வங்கி  ஊடாக பயன்பெறும்  பயனாளிகளின்  சுயதொழில் உற்பத்தி திறன்களை   அதிகரிக்கும்  வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்   நோக்கிலும்    சுயதொழில் உற்பத்திகளின் விற்பனையும்  வர்த்தக  கண்காட்சியும்   இடம்பெற்றது   .


இன்று இடம்பெற்ற  நிகழ்வில்    சுயதொழில் உற்பத்திகளான   கால்நடை  உற்பத்திகள்  , வீட்டுத்தோட்டம்  , உலர் உணவு பொருட்கள் , தைத்த ஆடைகள் , மண்பாண்டம் ,  மற்றும் பனையோலைகளின்  உற்பத்தி  பொருட்கள் போன்ற   பல்வேறு பட்ட  சுயதொழி உற்பத்தி பொருட்கள் இங்கு காட்சி  படுத்தப்பட்டதோடு  விற்பனை செய்யப்பட்டது.  இதேவேளை   இங்கு வாழ்வின் எழுச்சி  சமுதாய அடிப்படை வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்வில்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி . தவராசா  மற்றும்  வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகள்  , வாழ்வின் எழுச்சி  வலய வங்கி உத்தியோகத்தர்கள் ,வாழ்வின் எழுச்சி வங்கி பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .