அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிக்கான கருத்தரங்கு.

(லியோன்)   இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிக்கான சான்றிதழ் பட்டைய கற்கை நெறிகளுக்கான ஆரம்ப கருத்தரங்கு இன்று இடம்பெற்றது .


  
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர்  திருமதி . கேமலோஜினி தலைமையில் மட்டக்களப்பு நாவக்குடா இந்து கலாசார நிலையத்தில்  இன்று  காலை 10.00 மணியளவில்  ஆரம்பமானது  .

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிக்கான சான்றிதழ் பட்டைய கற்கை நெறியில்  மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 300க்கு மேற்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

 இந்த  கற்கை நெறிகளுக்கான  விரிவுரையாளராக  புனர்வாழ்வு  புனரமைப்பு , மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் புனர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பாளர்  .என் .புவனேந்திரன் கலந்துகொண்டார் .

இந்நிகழ்வில் இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் . திருமதி எழில்வாணி பத்மகுமார்  மற்றும் மட்டக்களப்பு  மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமை புரியும் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .