புனித அன்னையான மரியாளை துதிசெய்யும் ஒக்டோபர் மாத திருச்செபமாலை மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் பாதயாத்திரை நடைபெற்றது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் இருந்து இந்த பாதயாத்திரை நடைபெற்றது.
மட்டக்களப்பு மறைக்கோட்டத்தின் ஏற்பாட்டிலும் மரியாயின் சேனை இலங்கை மாதா கொமிசியத்தின் அனுசரணையுடனும் இந்த பாதயாத்திரை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
இலங்கை மற்றும் உலகமெங்கும் அமைதி தோன்றவும் வன்முறைகள் நீங்கவும் நீடித்த சமாதானம் ஏற்படவும் மாதாவின் மகிமையை உலகம் உணர்ந்துகொள்ளவும் இந்த பாதயாத்திரையின்போது பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.
இந்த பாதயாத்திரையில் மரியாயின் சேனை இலங்கை மாதா கொமிசியத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜே.எஸ்.மொராயஸ், மட்டக்களப்பு மறைக்கோட்டத்தின் தலைவி சகோதரி சரோஜா தம்பிப்பிள்ளை உட்பட அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த பாதையாத்திரையில் கலந்துகொண்டனர்.
மாதாவின் திருவுருவம் தாங்கிய வாகன பேரணியுடன் ஆரம்பமான இந்த பாதையாத்திரையானது புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தினை சென்றடைந்ததும் அங்கு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மரியாயின் சேனை இலங்கை மாதா கொமிசியத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜே.எஸ்.மொராயஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலி பூஜையில் தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் ரொபட் கலந்துகொண்டதுடன் மறை உரையினை அருட்தந்தை நோட்டன் ஜோன்சன் நிகழ்த்தினார்.