மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அர்ப்பண ஆண்டு நிறைவு விழா

.  ( லியோன்மட்டக்களப்பு மறை மாவட்டத்தில்  அர்ப்பண ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாக  அனைத்து மறைக்கோட்ட  பங்குகளிலும் பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .
 இதன் கீழ்   மட்டக்களப்பு மறை மாவட்ட  மறைக்கல்வி நடுநிலைத்தின் ஏற்பாட்டில் அர்ப்பண ஆண்டு நிறைவினை முன்னிட்டு  அர்ப்பண வாழ்வே புனிதத்தின் அடித்தளம் எனும் தொனிப்பொருளில்  புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் மாபெரும் கண்காட்சி  மட்டக்களப்பு மறை மாவட்ட  மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்பணி யேசுதாசன் தலைமையில் இன்று  மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித யோசப்வாஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது .

இக்கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை  மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்துகொண்டார் .இவருடன்  இணைந்து அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் மற்றும் மறைக்கோட்ட பங்கு மக்களும்  கலந்து சிறப்பித்தனர் .

இக்கண்காட்சியில்   கத்தோலிக்க திருச்சபையினால் புனிதர்களாக திருநிலைப்படுத்தப்பட்ட அனைத்து புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும்  வகையில்  புகைப்படங்கள் .ஓவியங்கள் , வாசகங்கள் மற்றும் உருவச்சிலைகளும்  கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன .

இக் கண்காட்சியினை  மட்டக்களப்பு மறைக்கோட்ட பங்கு  அருட்தந்தையர்கள் , மறைக்கோட்ட பங்கு  மறைக்கல்வி மாணவர்கள் மற்றும்  மறைக்கல்வி ஆசிரியர்கள்  இணைந்து   நடத்தியமை குறிப்பிடத்தக்கது .