சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மூன்றாவது தினமாகவும் கையெழுத்து பெறும் போராட்டம்

இலங்கையில் நடந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது தினமாகவும் கையெழுத்துப்பெறும்போராட்டம் நடாத்தப்பட்டுவருகின்றது.


சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்துப்பெறும்போராட்டம் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னாள் நேற்று புதன்கிழமை மாலை கையெழுத்து வேட்டை பெறும் போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சம் பேரின் கையொப்பங்களை திரட்டும் நோக்குடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொறியியலாளர் அலன் சத்தியநாதன் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் இன்று காலை முதல் காந்திப்பூங்கா அருகில் நடாத்தப்படும் கையெழுத்துப்போராட்டத்தில் முஸ்லிம் தமிழ் மக்கள் பெருமளவில் இந்த கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் இவ்வாறான போராட்டம் ஒன்றில் முஸ்லிம் மக்களும் அதிகளவில் பங்களிப்பு செய்த நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு உள்ளமை குறிப்பிடத்தக்கது.