(ஏ.எரிக் மகிழ்ராஜ்)
மட்டக்களப்பு,மண்முனை மேற்கு பிரதேசத்துக்குட்டபட்ட வவுணதீவுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலைக்காடு கட்டுச்சேனை கண்டம், கூழாவடிச்சேனை (கரவெட்டிக் கண்டம்), நெல்லுச்சேனை போன்ற பகுதிகளில் உள்ள நெல் வயல்கள் சிறுபோகம் (கால போகம்) செய்யப்படுவது வழக்கமாகும்.
ஒவ்வொரு சிறுபோகத்தின் போதும் வீதிகளினால் செல்லும் கட்டாக்காலி மாடுகள் இப்பிரதேசத்தில் உள்ள செய்கை பண்ணப்பட்ட நெற்கதிர்களை சாப்பிடுவதனால் இப்பிரதேச விவசாயிகள் பல காலங்களாக பெரு கஸ்டத்தினை அடைந்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புகளின் வட்ட விதானைகளிடமும் முறையிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அத்துடன் இரவு வேளைகளில் மின்சாரம் இல்லாத வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் வவுணதீவுப் பிரதேசம் மங்கிகட்டுப் பிரதேசம், ஈச்சந்தீவுப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கூட்டமாகச் செல்வதனால் விபத்துக்கள் அடிக்கடி சம்பவித்துள்ளது.
இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் உரிய அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுத்தறுமாறு இப்பகுதி மக்கள் தயவாய்க் கேட்கின்றனர்.