கிழக்கு மாகாணத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் நன்மை கருதி அதிநவீன வாடிக்கையாளர் சேவை நிலையம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு சென்றல் வீதியில் இலக்கம்39ஃ4 என்ற இலக்கத்தில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
ரெலிக்கொம் மற்றும் மொபிடல் நிறுவனங்களின் தலைவர் பி.ஜி.குமாரசிங்க சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் மொபிடல் நிறுவனத்தின் சிரேஸ்ட பொதுமுகாமையாளர் சந்திக விதாரண,பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் ரூபசிங்க,வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அதிநவீன வசதிகளுடன் கம்பில்லா வலையமைப்புடன் இதன் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் உலக நாடுகளிலும் கிடைக்க கூடிய அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை இந்த நிலையம் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.
தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் சிறப்புகழிவுகளுடனான பொதிகளைப்பெற்றுககொள்ளுமாறு இங்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தின் மூலம் 4ஜி மற்றும் எல்ரிஈ தொழில்நுட்பத்தினையும் ஸ்மார்ட்போன்கள்,டெப் கருவிகள்,தரவுக்கருவிகளையும் அனுபவித்து பிரயோகிப்பதோடு தகவல் தொழில்நுட்பத்தினை மேலும் அனுபவித்து உணரக்கூடிய வாய்ப்பினை அளிப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையத்தின் மூலம் விமான மற்றும் புகையிரத சேவை டிக்கட்டுகளை கொள்வனவுசெய்யக்கூடிய எம்.ரிக்கட்டிங் வசதிகள் சிறந்த சுகாதார சேவையினைப்பெற்றுக்கொள்ளக்கூடிய எம்.ஹெல்த் வசதிகள் மாணவர்களுக்கு முழுஅளவிலான தொலைக்கற்றை அனுபவத்தினை வழங்கும் எம்.லேர்னிங் சேவை உட்பட பல சேவைகளை இந்த கிளையூடாக வழங்கப்படவுள்ளது.
(வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)