இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8 ஆவது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டியும் விஷேட பூஜை வழிபாடுகள் கிழக்கில் உள்ள இந்து ஆலயங்களில் வெள்ளிக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
ஏறாவூர் 04 ஆம் குறிச்சி வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை ஆலய குருக்கள் சிவஸ்ரீ அ.கு. லிகிதராஜசர்மா மற்றும் ஸ்ரீகணேச காளிகா ஆலய பரிபாலன சபைத் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்து நடத்தினர்.
இதேபோன்று மட்டக்களப்புஇ வந்தாறுமூலைஇ சித்தாண்டி போன்ற பல பகுதிகளிலும் அமைந்துள்ள இந்து ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான ஆர். சம்பந்தன் அவர்களுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ள நிலையில் அவருக்கு இறையாசி வேண்டி வடக்கு கிழக்கில் இருக்கும் வணக்கத் தலங்களில் விசேட வழிபாட்டு ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழர்களின் தனிப்பெருந் தலைவரான கௌரவ ஆர். சம்பந்தன் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ளமை இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழ் பேசும் இனத்திற்கான, கௌரவமாகும்.
இப்பதவி எமது தலைவருக்கு அதன் கனதியையும், பொறுப்புகளையும், சுமந்துள்ளது. இப்பெரும் பொறுப்பைத் தாங்கி நாட்டிலே சமத்துவம், சமநீதி, சமவாய்ப்பு என்பவற்றை ஏற்படுத்துவதற்காக உழைத்திட எமது தலைவருக்கு ஆரோக்கியத்தையும், வலுவையும், மதிநுட்பத்தையும் வழங்க பிராத்திப்போம்
அதன் அடிப்படையிலே நாமெல்லாம் ஆண்டாண்டு காலமாக அடைந்திட முயற்சித்த இலட்சியத்தை எய்துவதற்கான சாத்தியங்களைக் கண்டறிந்து செயற்பட வேண்டிய உறுதிப்பாட்டையும் உணர்த்தி நிற்கும்” என்றார்.