அம்பிளாந்துறையில் கிழக்கு பல்கலைக்கழக நினைவு தினம்

கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நினைவு தினம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனுஸ்டிக்கப்பட்டது.


தமிழரசுக்கட்சி ஏற்பாடுசெய்த கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நினைவுதினம் நேற்று சனிக்கிழமை மாலை அம்பிளாந்துறையில் நடைபெற்றது.

பட்டிப்பளை பிரதேச தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாடுசெய்த இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது அம்பிளாந்துறை முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய முன்றிலில் பட்டிப்பளை பிரதேச தமிழரசுக்கட்சி கிளையின் தலைவர் இ.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக 25வது ஆண்டினை குறிக்கும் வகையில் 25 ஈகச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழக படுகொலை சம்பவம் தொடர்பிலான நினைவுப்பகிர்வும் நடைபெற்றது.