(வி.சுகிர்தகுமார்)
இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவினால் இம்முறை ஐ.நாவில் கொண்டு வரப்படும் பிரேரணையானது சர்வதேச விசாரணை எனும் பதத்தில் மென்போக்குக் கடைப்பிடிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்துக்கு கால வரையறையும் நிபந்தனையும் வழங்குவது போன்ற நிலைப்பாடு உருவாகலாம்
என அம்பாரை மாவட்ட மாணவர் மீட்புப் பேரவையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்தார்.
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலிநைவ்ஸ்கியை தான் கடந்த வாரம் சந்தித்தவேளை அவர் குறிப்பிட்ட கருத்துக்களிலிருந்து தன்னால் இவ்வாறு விளங்கிக் கொள்ளக்கூடியதாய் இருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இன்று(12)இவ்வாறு குறிப்பிட்டார்.
தெடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் , இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மூலமாக ஆட்சி மாற்றத்தினையடுத்து இலங்கை அரசாங்கத்திற்கு சில ஒத்துழைப்புக்களை வழங்கி நிபந்தனையுடனான பூகோள அடிப்படையில் புதிய அரசுக்கு சில காலம் உள்நாட்டுப் பொறிமுறைக்கான வாய்ப்பை வழங்குவதற்கான அவகாசத்தை வழங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளரின் சந்திப்பிலிருந்து என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது.
இது தவிர அவருடனான சந்திப்பின்போது இலங்கையில் உள்ள நமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் பலவற்றை முன்வைத்து மட்டுமல்லாது அம்பாறை மாவட்ட மக்கள் எதிர் நோக்கி வரும் பல்வேறான பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறான விடயங்களை அவருக்கு தெரியப்படுத்தியதுடன், இம்முறை ஐ.நா சபையில் இலங்கைக்கான சர்வதேச விசாரணையினை ஏற்படுத்தும்படி பாதிக்கப்பட்ட மக்களும் ஒட்டுமொத்த தமிழ் இனமும் வரும்புகின்றது என்பதை அவருக்கு தெளிவாக விளக்கியிருந்தோம்.
எது எவ்வாறாக அமைந்தாலும் நமது மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறான பிரச்சினைகளுக்கு உள்ளக விசாரணை மூலம் தீர்வு காண முற்பட்டு அவற்றுக்கான முடிவு தோல்வியிலேயே முடிவுற்றதனால் உள்ளகப் பொறிமுறையில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை எம்மால் அறியமுடிகின்றது.
தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் வரும் நமது தமிழ் இனத்திற்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதும் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வழியமைப்பதும் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய தேவையாகப் பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் நீண்ட கால வரலாற்றினை திரும்பிப் பார்க்கின்றபோது பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பல்வேறுபட்ட தரப்பினரால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளமையினை அறிந்து கொள்ள முடியும். பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், திம்புப் பேச்சுவார்த்தை, இலங்கை இந்திய ஒப்பந்தம், ரணில்-விடுதலைப் புலிகளின் ஒப்பந்தம் என்று நீண்டு கொண்டு செல்லும் இவ்வாறான ஒப்பந்தங்கள் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர்.
பல்வேறான ஏமாற்றங்கள் மாத்திரமல்லாமல் பாரியளவிலான பாதிப்புக்களையும் இழப்புக்களையும் எதிர்நோக்கிய சமூகமென்றால் அதுவும் நமது தமிழ் சமூகமென்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இவ்வாறாக பல இன்னல்களையும் இழப்புக்களையும் சந்தித்த தமிழ் இனத்திற்கு தீர்க்கமான நிரந்தரத் தீர்வும் கண்ணீரைத் துடைக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ்வதற்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்கம் சிறந்த சந்தர்ப்பமாகவும் இது அமையும்.
கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது தமிழ் யுவதிகள் 89 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் விதவைகளாகவும், 35 ஆயரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கவீனர்களாகவும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் தபுதாரர்களாகவும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிச் சிறுவர்கள் அநாதைகளாகவும், இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் போரிலே ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரத்திற்கு மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டும் இது வரை சுமார் ஆறு இலட்சத்திற்கு மேற்பட்டோர் அசாதாரண சூழ்நிலையால் மரணமடைந்தும் பத்து இலட்சம்பேர் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர்.
இவ்வாறான கண்கலங்கச் செய்யும் கவலை தரும் சூழ்நிலைக்கு முகம் கொடுத்தவர்களென்றால் நமது தமிழ் மக்கள் என்றால் இதனை யாரும் மறுப்பதற்கில்லை.
கடந்த கால யுத்த சூழல் காரணமாக அம்பாறை மாவட்ட மக்கள் வெகுவாகப் பாதிப்படைந்தனர். இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரை அந்நிலைமையிலிருந்து மீள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கான பரிகாரமும் எட்டப்படாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் வாழும் மக்களின் துயரினை நன்றிந்து நாம் மாணவர் மீட்புப் பேரவை என்னும் அமைப்பொன்றை உருவாக்கி அதனூடாக நமது மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களைப் பெற்றுக் கொள்ளும் கரிசனையுடனான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம்.
கடந்த காலத்தில் பல இளைஞர்கள் எமது தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், மக்களின் விடிவிற்காகவும் நமது மக்களின் சுதந்திரமான நல்வாழ்விற்காகவும் தமது உயிரைக்கூட துச்சமென எண்ணி ஆயுதம் ஏந்தி போராடினார்கள். ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் நமது சமூகத்தின் நன்மைக்காக சமூக நலன் சார்ந்த விடயங்களைச் சிந்திப்பது மிகவும் குறைவாக உள்ளது.
இந்நிலைமையினைக் கருத்திற்கொண்ட நாம் எதிர் வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் வலுவான இளைஞர் கட்டமைப்பை ஏற்படுத்தி இம்மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சமூக, சமய, பொருளாதார முன்னோற்றம் போன்ற பல்வேறான பிரச்சினைகளுக்கு தீர்வு பெறும் பொறிமுறையொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்படவுள்ளோம் என்றார்.