தேவ அழைத்தல் தினத்தினை முன்னிட்டு ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நிகழ்வுகள்

கிறிஸ்தவ மக்களின் மிக முக்கிய தினமான தேவ அழைத்தல் தினம் இன்று நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டன.


இதனையொட்டி இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் விசேட நிகழ்வு மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேவ அழைத்தல் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் அருட்தந்தை பிரைனர் செலர் மற்றும் மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இக்னேசியஸ் மற்றும் துறவறசபையின் குருமார்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

திருப்பலியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி கூடமும் திறந்துவைக்கப்பட்டது.

தேவ அழைத்தல் சபையின் செயற்பாடுகள் மற்றும் கிறிஸ்தவ மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த விடயங்கள் தாங்கியதாக இந்த கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை திறந்துவைத்ததுடன் கண்காட்சியினையும் பார்வையிட்டார்.