விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(அமிர்தகழி நிருபர் )

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின்  2014 மற்றும் 2015  ஆண்டுக்கான  புதிய மாணவர்களை வரவேற்க்கும்  நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


வரவேற்பு நிகழ்வானது கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக இரண்டாம் வருட மாணவர்களும்  மற்றும் மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக  சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக பணிப்பாளர் திருமதி .அம்மன்கிளி முருகதாஸ் , இசை துறை  விரிவுரையாளர் திருமதி . பிரியதர்ஷினி  ஜெகதீஸ்வரன் , நாடக துறை விரிவுரையாளர்  க . மௌனதாஸ் ,  கிழக்கு பல்கலைக்கழக  சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன்  மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.