மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தின் கடற்பரப்பில் வயோதிப பெண்னொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த தம்பியப்பா சரஸ்வதி(75வயது)என்ற பெண்னே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்ததாகவும் இது தொடர்பில் கல்முனைப்பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டிருந்ததாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சுடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.