மாணவர்கள் மத்தியில் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கவும் புதிய கண்டுபிடிப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் விசேடமாக உருவாக்கப்பட்ட “வழிகாட்டிகள் விஞ்ஞான பூங்கா”வின் கண்காட்சி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மாணவர்கள் மத்தியில் புத்தாக்க சிந்தனையினை ஏற்படுத்தும் வகையில் “வழிகாட்டிகள் விஞ்ஞான பூங்கா”அமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
வழிகாட்டிகள் விஞ்ஞானப் பூங்காவின் தலைவர் கலாநிதி ஜெயரூபன் தலைமையில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் மாபெரும் விஞ்ஞான கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜயசிங்கம்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த கண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தமிழர்களின் பண்டைய கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை ஆரம்பமான இந்த கண்காட்சியானது எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.