புனித மைக்கேல் கல்லூரியின் கல்லூரி தினத்தினை முன்னிட்டு “மைக்வோக்”

இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைகேல்கல்லூரியின் 142வது கல்லூரி தினத்தினை முன்னிட்டு இன்று காலை மாபெரும்”மைக்வோக்”என்னும் தலைப்புடனான நடைபவனி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை பாடசாலையில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

புனித மைகேல்கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஆயரின் பிரதிநிதியாக அருட்தந்தை இக்னேசியஸ் ஜோசப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றதுடன் நடைபவனியை குறிக்கும் வகையில் அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் புனித மைக்கேல் கல்லூரியின் செய்திகளை வெளியிடும் வகையில் இணையத்தளம் ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துச்செல்லும் புற்றுநோயை ஒழிப்போம் என்னும் தொனிப்பொருளில் மைக்வோக் நடைபவனி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நடைபவனியில் கல்லூரியின் பழைய மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் என பெருந்திருளானோர் கலந்துகொண்டனர்.