மாவேற்குடா பிள்ளையார் ஆலய தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது

இன்று விநாயகர் சதுர்த்தியாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.


குpழக்கிலங்கையின் மிக உயர்ந்த தேரினை உடைய ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு திருப்பழுகாமம் மாவேற்குடா அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா பல்லாயிரகணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையின் நீண்ட வரலாற்றிணையும் எழில் சூழ்ந்த வயல் பிரதேசங்களையும் கொண்டதாக உள்ள இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தினமும் ஆலயத்தின் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதியுலா வெளி வீதியுலா என்பன நடைபெற்றுவருகின்றன.

ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பத்து தினங்கள் நடைபெறவுள்ளதுடன் நாளை ஆலயத்தின் தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.

இன்று காலை வசந்த மண்டபத்தில் பஞ்சமுக  கணபதி மற்றும் முருகன்,சிவன் ஆகிய சுவாமிகளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சுவாமி உள் வீதியுலாவும் நடைபெற்றத.

ஆதனைத்தொடர்ந்து பஞ்சமுக கணபதி கொண்டுவரப்பட்டு தேரடியில் விசேட பூஜைகளுடன் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தேர் உற்சவத்தின்போது ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடக்கயிரை இழுத்து தேர் உற்சவத்தினை சிறப்பித்தனர்.

இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.