மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் உதவி தேர்தல் ஆணயாளர் மற்றும் அவருடன் சென்றவர்களை தாக்கமுற்பட்டது தொடர்பில் தேடப்பட்டுவந்த காத்தான்குடி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பரீட் மற்றும் காத்தான்குடி நகர முன்னாள் முதல்வர் அஸ்பர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குhத்தான்குடி நகர மண்டபத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தேர்தல் முறைகேடுகள் நடப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பில் விசாரரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை இருவரும் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.