மாமாங்கேஸ்வரர் உற்சவத்தின்போது இரண்டு பெண்களின் தங்க மாலைகள் அபகரிப்பு

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்ற தினமான நேற்று இரண்டு பெண்களின் தங்கமாலைகள் அறுத்துச்செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் கொடியேற்றம் நிகழ்ந்தபோது ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட சன நெரிசலில் இரண்டு பெண்களின் தங்க மாலைகள் அறுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.