வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு மட்டக்களப்பினை சேர்ந்த இளம் இயக்குனர் பலி

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் நேற்றிரவு ரயிலில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மட்டக்களப்பு, ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த 28 வயதான சிவலிங்கம் நிரோசன் என்பவரே உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளர்.

மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயில் மோதி படுகாயமடைந்த இளைஞன், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவலிங்கம் நிரோசன் மட்டக்களப்பில் இருந்து வெளியான பல்வேறு கலைப்படைப்புகளின் பின்னணியில் செயற்பட்டுள்ளதுடன், பல குறுந்திரைப்படங்களையும் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.