இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியம் சந்திரகாந்தனுக்கு ஆதரவு

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரகாந்தனுக்கு ஆதரவு வழங்க இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியம் முன்வந்துள்ளது.


இன்று 11.08.2015 சந்திரகாந்தனைச் சந்தித்த இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தினர் முற்று முழுதாக ஆதரவு வழங்குவதாகவும் தங்களது அமைப்பில் 4632 பேர் இருப்பதாகவும் அனைவரும் ஒருமித்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும். சந்திரகாந்தனின் வெற்றிக்காக உழைக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்திரகாந்தன்  அவர்கள் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் 800 பேருக்குமேல் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாகவும். இதன் மூலம் தமது இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த பலர் தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்கள் சந்திரகாந்தனால் வழங்கப்பட்ட தொழில்வாய்ப்புக்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் இவ்வாறு எந்த ஒரு அரசியல்வாதியும் வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

முஸ்லிம் முதலமைச்சர் வந்ததன் பின்னர் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டதுடன் தொழில்வாய்ப்பிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். எதிர்வரும் காலங்களில் தமிழ் சமூகம் முன்னேற்றப்பாதை நோக்கி செல்லவேண்டுமாக இருந்தால் எமது தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் கிழக்கு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிக்கொண்டிருக்கும் சந்திரகாந்தனுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.