மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் விரிவாக்கற் பிரிவு விடுக்கும் அவசர அறிவித்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் மற்றும் வெல்லாவெளி விவசாய விரிவாக்கப் பிரிவிற்குட்பட்ட வயல் நிலங்களில் விவசாயிகளால் ‘அறக்கொட்டி’ என அழைக்கப்படும் கபிலநிற தாவர தத்தியின் தாக்கம் பரவலடைந்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே படத்தில் காட்டியுள்ளவாறான பூச்சியோ அல்லது தாக்க அறிகுறிகளோ காணப்படின் உடனடியாக உங்கள் பகுதி விவசாயப்போதனாசிரியரை தொடர்பு கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகளிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பிலான அறிக்கையினை விவசாய திணைக்களத்தின் விரிவாக்கற் பிரிவு அனுப்பிவைத்துள்ளது.