சக்தி இழப்பினை குறைத்து வருமானத்தினை அதிகரிப்பதற்கான பயிற்சி செயலமர்வு

கிழக்கு மாகாணத்தில் பாரிய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மின்சக்தியை குறைத்து அதன் மூலம் வருமானத்தினை பெருக்குவது தொடர்பிலான விசேட செயலமர்வு ஒன்று இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.


கிழக்கு மாகாணத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் நன்மை கருதி ஜி.ரி.ஸற், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும் ஹற்றன் நசனல் வங்கி என்பன இணைந்து இந்த செயலமர்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இந்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு,கல்லடியில்; உள்ள கிரின் கார்டன் விடுதியில் நடைபெற்றது.

“சக்தி விளைத்திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்கசக்திகள் மீதான பயிற்சி பயிற்சிப்பட்டறை”எனும் தலைப்பில் இந்த பயிற்சி வகுப்பு நடாத்தப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக இவ்வாறான பயிற்சிப்பட்டறையை நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் கொண்ட இந்த பயிற்சி வகுப்புகளை இலங்கை சக்தி முகாமைத்துவ நிறுவகத்தின் தலைவர் நிமால் பெரேரா,சர்தேசச ரீதியில் சக்தி வள கட்டுப்பாடு விரிவுரைகளை மேற்கொண்டுவரும் பிலிப்ஸ் பொவரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் ஹற்றன் நசனல் வங்கியின் முகாமையாளர்களான சேனக விஜயசேன,பி.ரமணதாசன், ஜி.ரி.ஸற் சிரேஸ்ட ஆலோசகர் ஜேர்மன் முல்லர்,மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் முகாமையாளர் கே.குகதாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் பாரிய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.